மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-12 18:45 GMT

குலசேகரம்:

குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மோட்டார் சைக்கிள் கேட்டார்

குலசேகரம் அருகே உள்ள கொல்லாறை, கைதக்கல் காலனியை சேர்ந்தவர் செல்வன், தொழிலாளி. இவருக்கு சரவணன் (வயது 22), சஜின் (20) என்ற 2 மகன்கள் உண்டு. இதில் சஜின் பிளஸ்-2 வரை படித்து விட்டு வெல்டிங் வேலைக்கு சென்று வந்தார்.

செல்வன் காலனியின் அருகில் புதிதாக வீடு கட்டி சமீபத்தில் குடும்பத்துடன் குடியேறினார். இந்த நிலையில் சஜின், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு தந்தையிடம் கேட்டார். அதற்கு புதிதாக வீடு கட்டியதால் பண நெருக்கடியில் இருப்பதாகவும், சிறிது நாட்கள் கழித்து மோட்டார் சைக்கிள் வாங்கி தருவதாகவும் செல்வன் கூறியுள்ளார். இதனால் சஜின் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

மேலும் சஜின் புதிய வீட்டில் தங்காமல் காலனியில் உள்ள வீட்டில் இரவில் தங்கி வந்தார் இந்த நிலையில் நேற்று காலையில் சஜினுக்கு சிற்றுண்டி கொடுக்க செல்வம் கொண்டு சென்றார். அப்போது அங்கு சஜின் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது குறித்து குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சஜின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை என்ற விபரீத முடிவை தேடி கொண்டது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்