சொத்து பிரச்சினையில் வாலிபர் அடித்துக்கொலை

செம்பனார்கோவில் அருகே சொத்து பிரச்சினையில் வாலிபரை அடித்துக்கொன்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-19 18:45 GMT

பொறையாறு:

செம்பனார்கோவில் அருகே சொத்து பிரச்சினையில் வாலிபரை அடித்துக்கொன்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சொத்து பிரச்சினை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் முக்கூட்டு பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவருடைய மகன் திருவேங்கடநாதன் (வயது24). டிரைவர்.இவரது உறவினர் ஆக்கூர் வேளாண் திடல் பகுதியை சேர்ந்த கண்ணையன் மகன் கலியபெருமாள் (26). இவர்கள் குடுபம்த்தினர் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

உருட்டுக்கட்டையால் தாக்குதல்

இந்த நிலையில் சம்பவத்தன்று கலியபெருமாளுக்கும், திருவேங்கடநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.இதை தொடர்ந்து கலியபெருமாள் தனது ஆதரவாளர்களான ஆக்கூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த அருண் ஆகாஷ் (26) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோருடன் சென்று தனது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த திருவேங்கடநாதனை வழிமறித்து சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருவேங்கடநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

3 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியபெருமாள், அருண் ஆகாஷ் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்