2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

மார்த்தாண்டத்தில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-17 17:50 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மார்த்தாண்டம் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ தலைமையிலான போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மார்த்தாண்டம் சந்தை பகுதியில் ஒரு வாலிபர் பையுடன் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தார்.

உடனே போலீசார் அவரை பிடித்து சோதனை நடத்தினர். அதில் அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், கஞ்சாவுடன் சிக்கியவர் மார்த்தாண்டம் கண்ணக்கோடு பகுதியை சேர்ந்த ஷாபான் அதீஸ் (வயது23) என்பது தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்