8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
கருமத்தம்பட்டி அருகே 8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கருமத்தம்பட்டி
கருமத்தம்பட்டி-கணியூர் சுங்கச்சாவடி அருகே மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்து சோதனை செய்தனர். இதில் காரில் விற்பனைக்காக 8 கிலோ கஞ்சா மறைந்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து கார் டிரைவரான மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சதீஷ் என்ற வெங்கடாசலம் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான சதீஷ் மீது கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.