4 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருமங்கலம் அருகே 4 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-11 21:00 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம் கட்டதேவன் பட்டி விலக்கு பகுதியில் திருமங்கலம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ் தலைமையில் சிந்துபட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த பேரையூர் அருகே உள்ள கணவாய்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீநாத் (வயது 25). என்பவரை சோதனை மேற்கொண்ட போது இருசக்கர வாகனத்தில் 4 கிலோ கஞ்சா கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து 4 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து ஸ்ரீநாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்