1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

ராமநாதபுரம் அருகே 1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-12 17:29 GMT

ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நகரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆர்.எஸ்.மடை மின்வாரிய அலுவலகம் அருகில் கையில் பையுடன் நின்றிருந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து சோதனையிட்டனர்.

அவர் வைத்திருந்த பையில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ஆர்.எஸ்.மடை முனியசாமி மகன் ஜெமினிராஜ் (வயது24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஜெமினிராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்