சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-23 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 25). இவர் சம்பவத்தன்று 17 வயதுடைய சிறுமியை திருமணம் செய்ததாக தெரிகிறது. இது பற்றி அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார், 17 வயது சிறுமியை திருமணம் செய்த சதீசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்