போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை:போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
நெல்லை:
வன்னிக்கோனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் மதன் (வயது 24). இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர்.