இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

வாசுதேவநல்லூரில் இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-09 15:29 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் இசக்கி மகன் மகேந்திரன் (வயது 26). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக, மகேந்திரனை விட்டு பிரிந்து அவரது மனைவி கடந்த 6 மாதங்களாக தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் மகேந்திரன் 17 வயது இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புளியங்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர். மேலும் 17 வயது இளம்பெண்ணை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்