போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
நெல்லை டவுன் அக்கசாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் குழந்தை வேல் (வயது 22). இவர் 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பாளையங்கோட்டை சமூகநல அலுவலர் பார்வதி மல்லிகா நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரணை நடத்தினார். தொடர்ந்து குழந்தைவேலு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.