தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது

சின்னசேலம் அருகே தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-10-29 18:45 GMT

சின்னசேலம்:

சின்னசேலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமம் தெற்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வினோத்குமார் (வயது 29). அப்பகுதியில் சாராயம் விற்றதால் வினோத்குமாரை கீழ்குப்பம் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வினோத்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவு நகல், அவரிடம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்