போக்சோ வழக்கில் வாலிபர் கைது
போக்சோ வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது30). இவரது மனைவி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இந்தநிலையில் ரெங்கசாமி 17 வயது சிறுமியுடன் கடந்த சில நாட்களாக நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி அந்த சிறுமி பஸ்சுக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ரெங்கசாமி, சிறுமியை அவரது வீட்டில் இறக்கி விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, செல்லும் வழியில் அந்த சிறுமியை ரெங்கசாமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், கடந்த 3-ந்தேதி ரெங்கசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த ரெங்கசாமியை நேற்று போலீசார் கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.