'போக்சோ'வில் வாலிபர் கைது
போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போடி அருகே உள்ள தாடிச்சேரியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). இவர் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்கும் இடைத்தரகர் வேலை செய்து வருகிறார். இவர் 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் போடி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.