போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-24 17:58 GMT

அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிராமம் நரியன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மகன் மனோஜ் (வயது 23). இவர் 17 வயது கல்லூரி மாணவியுடன் முகநூலில் பேசி வந்துள்ளார். பின்னர் மனோஜ் அந்த மாணவியை ஏமாற்றி வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றது கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், அறந்தாங்கி மகளிர் போலீசார் கல்லூரி மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்