மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் வாலிபர் கைது
திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் வாலிபர் கைது ெசய்யப்பட்டார்.
திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நடைபெற்று உள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தது திருவண்ணாமலை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை (வயது 25) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.