குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

அரக்கோணத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-01 16:47 GMT

அரக்கோணம் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவரை அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் கரண் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வளர்மதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கரணை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து கரணை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்