குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-21 19:18 GMT


திருத்தங்கல் அருகே உள்ள ஆலாவூரணி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவர் திருத்தங்கல் போலீஸ்சரகத்திற்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து பல்வேறு குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலையும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வருவதால் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் மேகநாத ரெட்டி அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கார்த்திக்கை திருத்தங்கல் போலீசார் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்