குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Update: 2022-10-21 21:10 GMT

நாகர்கோவில்:

விளவங்கோடு அருகே உள்ள தேவிகோடு செறுவாலூரை சேர்ந்தவர் அனி(வயது 26). கஞ்சா விற்றதாக இவர் மீது மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி அனி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அனியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான அனுமதி கோரி கலெக்டர் அரவிந்துக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் அரவிந்த் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அனியை மார்த்தாண்டம் போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்