குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-07 17:01 GMT

உத்தமபாளையம் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 22). வழிப்பறியில் ஈடுபட்டதாக இவர் மீது, உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் அவரை கைது செய்தனர். இதனையடுத்து அவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் ராஜ்குமார் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து ராஜ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் ராஜ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவு நகலை மதுரை மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்