குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-21 19:31 GMT

பனமரத்துப்பட்டி:-

மல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட கந்தசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் கோழி என்கிற கோகுல்ராஜ் (வயது 23). இவர் மீது அம்மாபேட்டை, பனமரத்துப்பட்டி, மல்லூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் மல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கில் கோகுல்ராஜ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு சேலம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து கோகுல்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சேலம் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்