குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
பாபநாசத்தை சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா படுகை புதுத்தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் தினேஷ்வளவன் (வயது 28). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, குண்டர் சட்டத்தில் தினேஷ்வளவனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.