குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்
மதுரை கல்மேடு பூங்கா பகுதியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி (வயது 24). இவர், மீது நகை பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்ததால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், சவுந்தரபாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.