குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

செங்கல் சூளை அதிபர் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-09 19:18 GMT

நாகர்கோவில்:

செங்கல் சூளை அதிபர் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 58), செங்கல் சூளை அதிபர். இவரை கடந்த சில மாதங்கள் முன்பு ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்த தங்கஜோஸ் என்ற ஜோஸ் (23) என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதனைத்தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று தங்கஜோசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அவர் உத்தரவிட்டார். இதையடுத்து ஆரல்வாய்மொழி போலீசார் தங்கஜோசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நேற்று பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்