21 வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது

21 வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-02 21:06 GMT

துறையூர்:

பணம் பறிப்பு

துறையூரை அடுத்துள்ள பெருமாள் மலை அடிவாரத்தில் வசித்து வருபவர் தனசூரியன்(வயது 28). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் அடிவாரத்தில் இருந்து கீரம்பூர் செல்லும் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரை, ஒரு வாலிபர் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் மோட்டார் சைக்கிளை நிறுத்திய தனசூரியனிடம் அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1,500-ஐ பறித்துக் கொண்டு சென்று விட்டார். இது பற்றி தனசூரியன் துறையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் தனிப்படை அமைத்து, வாகன சோதனையில் ஈடுபட்டார்.

21 வழக்குகள்

அப்போது பெருமாள்மலை அடிவார பகுதியில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறியுள்ளார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் அவர் துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்த லோகேஸ்வரன்(33) என்பதும், அவர் மீது 21 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

24 பவுன் நகை...

மேலும் துறையூர் பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 24 பவுன் நகை மற்றும் முக்கால் கிலோ வெள்ளி, அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் உள்பட மொத்தம் 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். மேலும் லோகேஸ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்