ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரிடம் ரூ.5 லட்சம் திருடிய வாலிபர் கைது

வாலாஜாவில் ஓய்வு பெற்ற‌ ரெயில்வே ஊழியரிடம் ரூ.5 லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டது.

Update: 2023-06-23 18:29 GMT

வாலாஜாவில் உள்ள சோளிங்கர் ரோடு விவேகானந்தர் நகரில் வசிப்பவர் கோவிந்தராஜ் (வயது 60). இவர் தென்னக ெரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் வாலாஜா பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்தை எடுத்தார். அதனை இருசக்கர வாகனத்தில் உள்ள பக்கவாட்டுப் பெட்டியில் ஒரு பையில் வைத்து பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

சோளிங்கர் ரோடு வழியாக சென்றபோது சாலை ஓரம் உள்ள கடை ஒன்றின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க சென்றார்.

பி்ன்னர் திரும்பியபோது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகன பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.5 லட்சத்தை பையுடன் திருடிச் சென்றார்.

இதுகுறித்து அவர் வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் வாலாஜா வெற்றிலைகார தெருவை சேர்ந்த லாரன்ஸ் மகன் பிரதீப்குமார் (22) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பிரதீப்குமாரிடம் இருந்து பணத்தை கைப்பற்றி, அவரை ேபாலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்