பீளமேடு
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ்குமார் (வயது 22). இவர் கோவை பீளமேடு ஹட்கோ முருகன் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிலிண்டர் சப்ளையராக பணி புரிகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று லோகேஷ்குமார் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தர்மபுரிக்கு சென்றுவிட்டார். பின்னர் 10 நாட்கள் கழித்து கோவை திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.1லடசத்து 85 ஆயிரம் ரொக்கம் மற்றும் ½ பவுன் தங்கம் திருடு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த லோகேஷ்குமார் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், திருட்டில் ஈடுபட்டது பீளமேட்டில் தங்கி வேலை பார்க்கும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த தொழிலாளி சுடலைமணி (21) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் அரை பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.