கள்ளக்குறிச்சி பகுதியில்மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-02-11 18:45 GMT


கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார், ஏமப்பேர் புறவழிச்சாலை பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர்.

அதில் அவர், ஏமப்பேர் அக்ரஹார தெருவை சேர்ந்த ரமேஜ் மகன் கோகுல் எனவும், கள்ளக்குறிச்சி பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களையும், வரஞ்சரம் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடியவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் கோகுல் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்து அவரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்