மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-08 20:46 GMT

திருச்சி:

திருச்சி மாநகரில் உறையூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாத்திமாநகர், அகமதுகாலனி மற்றும் குறத்தெரு பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் சந்தேகப்படும்படியாக சுற்றிய நபரை பிடித்து விசாரித்தபோது அவர், உறையூரை சேர்ந்த மணி என்ற மாசிலாமணி(வயது 22) என்பதும், இவர் தான் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடினார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்