மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மது குடிக்க பணம் இல்லாததால் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கிணத்துக்கடவு
மது குடிக்க பணம் இல்லாததால் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, பசுபதி கோவில், கபிரியேல்புரத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவருடைய மகன் ஜோயல்பிராங்லின் (வயது 19)
இவர் கிணத்துக்கடவில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இதற்காக அவர் தனது தாயாருடன் ஒத்தக்கால்மண்டபம், மில்கேட் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார்.
நேற்றுமுன்தினம் ஜோயல்பிராங்லின் கிணத்துக்கடவு மெயின் ரோடு கிருஷ்ணசாமிபுரம் பிரிவில் உள்ள ஒரு கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நண்பரை பார்க்க சென் றார்.
அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காண வில்லை. தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை. அதை யாரோ திருடி சென்றது தெரியவந்தது.
வாலிபர் கைது
இது குறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து நேற்று காலையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சொலவம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற நபரை போலீசார் பிடித்து விசாரித் தனர்.
அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
உடனே அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். இதில் அவர், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், வளையகாரத்தெருவை சேர்ந்த வினோத் (வயது 25) என்பதும், அவர் தான் மோட்டார் சைக்கிளை திருடினார் என்பதும் தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.
மது குடிக்க திருட்டு
வினோத், கிணத்துக்கடவு தேவரடிபாளையத்தில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்து உள்ளார். அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து உள்ளார்.
இதனால் வருமானம் இன்றி தவித்து உள்ளார். இதன் காரணமாக குடிக்க பணம் இல்லாத நிலையில் மது பாட்டில்கள் வாங்குவதற்காக வினோத் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது.
அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.