மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Update: 2022-09-16 18:45 GMT

சிக்கல்

கீழ்வேளூர் அருகே கூரத்தாங்குடி ஊராட்சி மேநாகலூரை சேர்ந்த கண்ணதாசன் மகன் வாணிதாசன் (வயது27). கடந்த 13-ந்தேதி இவர் ஆந்தகுடி மந்தகரை மாரியம்மன் கோவிலில் நடந்த திருவிழாவிற்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளை கோவில் வாசலில் நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து வாணிதாசன் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அண்டக்குடி கீழத்தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் ராஜ் (25) என்பவர் மோட்டார்சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ராஜீவை கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்