மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-04 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் மோட்டார் ைசக்கிள்களை திருடிய வாலிபரை ேபாலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருட்டு மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்கியவரையும் போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

கோவில்பட்டி அம்பேத்கர் தெருவில் குடியிருப்பவர் கனிராஜ் (வயது 48). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த மே. 28-ந்தேதி இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருடுபோனது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், மோட்டார் சைக்கிளை ராஜபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் சக்தி கணேஷ் (22) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது.

2பேர் கைது

அவரை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி கைது செய்து விசாரணை நடத்தினார். அவர் இதே போன்று மதுரையில் 2 மோட்டார் சைக்கிளை திருடியதும், திருடிய மோட்டார் சைக்கிள்களை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்த ராஜா (வயது 46) என்பவரிடம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து ராஜாவையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்