தோட்டத்தில் மோட்டார் திருடியவர் கைது

உடன்குடி அருகே தோட்டத்தில் மோட்டார் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-04 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

உடன்குடி சந்தையடியூரை சேர்ந்த பொன்னையா நாடார் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 58). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் கொட்டங்காடு ஊரிலிருந்து குலசேகரன்பட்டினம் ஊருக்கு செல்லும் வழியில் உள்ளது. இத் தோட்டத்தில் முருங்கை மற்றும் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் இருந்த ரூ.18 ஆயிரம் மதிப்பிலான மோட்டாரை மர்ம நபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் செட்டியாபத்து முத்துகிருஷ்ணாபுரம் வடக்கு திருவை சேர்ந்த சுடலை மகன் பட்டு கிருஷ்ணன் (26) என்பவர் மோட்டாரை திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, மோட்டாரை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்