அரசு பஸ் கண்டக்டரிடம் பணம் திருடிய வாலிபர் கைது

குன்னம் அருகே அரசு பஸ் கண்டக்டரிடம் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-22 19:33 GMT

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் வயது (38). இவர் உடையார்பாளையம் அரசு பஸ் போக்குவரத்து கிளையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் பணியாற்றியபோது திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகிலுள்ள சிந்தாமணியை சேர்ந்த விஜயகுமார் (33) என்பவர் அரியலூரில் இருந்து திருச்சி செல்வதற்காக டிக்கெட் வாங்கி பஸ்சில் பயணம் செய்து உள்ளார். குன்னம் அருகே உள்ள அழகிரிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது விஜயகுமார், கண்டக்டர் பாண்டியன் வைத்திருந்த பணப்பையில் இருந்து பணத்தை திருடிவிட்டு பஸ்சில் இருந்து தப்பி ஓடினார். பின்னர் சோளக்காட்டில் மறைந்திருந்த அவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து குன்னம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து குன்னம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்