மாணவியிடம் நகை பறித்த வாலிபர் கைது

சிதம்பரத்தில் மாணவியிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-05 19:44 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் விளங்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி மகள் ரசிகா(வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது சைக்கிளில் சிதம்பரம் லால்கான் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென ரசிகா கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரசிகாவிடம் நகை பறித்தது டி.நெடுஞ்சேரி மெயின் ரோட்டை சேர்ந்த நிஜாருதீன் மகன் நிஷாருதீன்(23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து நிஷாருதீனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்