இரும்பு கம்பிகளை திருடிய வாலிபர் கைது

பாளையங்கோட்டையில் இரும்பு கம்பிகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-19 19:17 GMT

பாளையங்கோட்டை இசக்கியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டேனியல் சுந்தர் (வயது 32). இவர் பாளையங்கோட்டை வீரப்பன் காலனி பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அங்கு கட்டுமான பணிகளுக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் டேனியல் சுந்தர் அளித்த புகாரின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில், மேலப்பாட்டம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கிபாண்டி (21) இரும்பு கம்பிகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 30½ கிலோ இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்