ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் திருடிய வாலிபர் கைது

மேல்விஷாரத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-08 12:13 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கயூம் (வயது 39). இவர் அதேப் பகுதியில் ஓட்டுனர் பியிற்சி பள்ளி நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக பயிற்சி பள்ளியை திறக்காமல் மூடியே வைத்துள்ளார். பின்னர் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் திறந்து உள்ளார். அப்போது பயிற்சி பள்ளியின் உள்ளே வைக்கப்பட்டிருந்த அலுமினிய பொருட்கள், ஒயர் மற்றும் கருவிகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அப்துல் கயூம், ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த அன்சாரி (21) என்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் திருடியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்