மின் மோட்டார் திருடிய வாலிபர் கைது
கூடலூரில் மின் மோட்டார் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கூடலூர்
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தோட்டமூலா பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது தோட்டத்தில் இருந்த மின் மோட்டார் மற்றும் தெளிப்பானை திருட்டு போனது. இதுகுறித்து ராமகிருஷ்ணன் கூடலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கபில்தேவ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மேல் கூடலூரை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் குமார்ராஜ் (வயது 35) என்பதும், தோட்டத்தில் மின் மோட்டார் திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மின் மோட்டார், ெதளிப்பான் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான குமார்ராஜ் மீது போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.