பெண்ணிடம் கவரிங் நகை பறித்த வாலிபர் கைது

நெல்லை அருகே பெண்ணிடம் கவரிங் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-10-30 20:55 GMT

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்தவர் விமலா (வயது 49). இவர் அருகன்குளம் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி அருகன்குளம் பஸ்நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென்று விமலா கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கிலியை பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் கொள்ளையர்கள் கைக்கு நகை கிடைத்து விடாத வகையில் விமலா சங்கிலியை பிடித்துக்கொண்டார்.

இந்த மோதலில் மர்ம நபர்கள் 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் ஒருவர் சிக்கினார். அவருடன் வந்த மற்றொரு நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் அங்கு விரைந்து வந்து சிக்கிய நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறையை சேர்ந்த சஜின்குமார் (25) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சஜின்குமாரை கைது செய்தனர். மற்றொரு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்