பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-04 19:51 GMT

துவாக்குடியை அடுத்த வாழவந்தான்கோட்டை குமரன்நகர் பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் (வயது 26). இவர் நேற்று முன்தினம் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த பாலனந்தம் (33) என்பவர் எஸ்தரிடம் இருந்த செல்போனை திருடியுள்ளார். இதை எஸ்தர் கவனித்து, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்து கண்டோன்மெண்ட் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்