கோவிலில் குத்துவிளக்குகளை திருடிய வாலிபர் கைது

கோவிலில் குத்துவிளக்குகளை திருடிய வாலிபர் கைது

Update: 2023-08-18 18:45 GMT

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலத்தை சேர்ந்தவர் ராஜகுசேலன் (வயது53), தொழிலாளி. இவருடைய குடும்ப கோவில் சேரமங்கலத்தில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். சம்பவத்தன்று இவரது கோவிலின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமி அங்கிருந்த பெரிய குத்துவிளக்குகள், அலுமினிய உருளி ஆகியவை திருட்டு போனது. இதுகுறித்து ராஜகுசேலன் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம ஆசாமியை தேடினர்.

இந்தநிலையில் இதுதொடர்பாக பரவன்விளையை சேர்ந்த செல்வகுமார் (29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவிலில் திருடிய குத்துவிளக்குகளை யாரும் வாங்காததால் அவற்றை அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அந்த குளத்துக்கு அவரை அழைத்துச் சென்று ேதடினர். அதில் விளக்கின் ஒரு பகுதி மட்டும் கிடைத்தது. மீதி பாகங்கள் கிடைக்கவில்லை. அவற்றை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து செல்வகுமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்