10 பவுன் நகைகள் திருடிய வாலிபர் கைது
10 பவுன் நகைகள் திருடிய வாலிபர் கைது
வேதாரண்யம் போலீஸ் சரகம் அண்டர்காடு கொல்லபுரம் ஏரி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ெசார்ணலதா(வயது29). கடந்த 17-ந்தேதி இவர் காலை வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் அருகே வைத்து விட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலை வீட்டை திறந்து பார்த்த போது வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் சொர்ணலதா புகார் செய்தார். புகாரில் அதே தெருவில் வசிக்கும் உதயசூரியன் மகன் தினேஷ்பாபு(32) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார். இதையடுத்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ் உத்தரவின் ேபரில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி தினேஷ்பாபுைவ ேதடிவந்தனர். இந்தநிலையில் சென்னையில் தையல் கடை நடத்தி வரும் உதயசூரியன் வீட்டில் தினேஷ்பாபு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சென்னைக்கு சென்று அங்கு இருந்த தினேஷ்பாபுவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சொர்ணலதா வீட்டில் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை வேதாரண்யத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் இருந்த 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வேதாரண்யம் ேபாலீஸ் இன்ஸ்ெபக்டா்(ெபாறுப்பு) பசுபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ் பாபுைவ கைது செய்தனர்.