மூதாட்டியை கத்தியால் குத்தி 3 பவுன் நகையை பறித்த வாலிபர் கைது

ராமநத்தம் அருகே மூதாட்டியை கத்தியால் குத்தி 3 பவுன் நகையை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-03-14 18:45 GMT

ராமநத்தம்:

ராமநத்தம் அருகே உள்ள ம.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி நல்லம்மாள்(வயது 50). இவர் வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த மதியழகன் மகன் கார்த்திகேயன்(25) என்பவர் நல்லம்மாளிடம், உங்களை போன்று தனது மனைவிக்கும் தாலி சங்கிலி செய்ய வேண்டும் என்றும், அதனை கழற்றி கொடுத்தால் செல்போனில் படம் எடுத்து தருகிறேன் என்றும் கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்ததால் நல்லம்மாளின் முதுகில் கத்தியால் குத்தி அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி சங்கிலியை கார்த்திகேயன் பறித்துச்சென்றார். இதில் காயமடைந்த நல்லம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்