சிறுமியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

நெல்லிக்குப்பம் அருகே சிறுமியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-20 18:45 GMT

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் அடுத்த வான்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சத்யா (வயது 17). இந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (19) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோத தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் நின்று கொண்டிருந்த சத்யாவை திடீரென ரஞ்சித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றார். இதில் சத்யாவுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

கைது

இதையடுத்து சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்