மாமனாரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

மாமனாரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-30 18:44 GMT

புலியூர் அருகே உள்ள புரவிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவரது மகளுக்கும், கட்டளை பகுதியை சேர்ந்த தினேஷ்பாபு (27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் தினேஷ்பாபுவின் மனைவி கோவில் திருவிழாவிற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து தினேஷ் பாபு தனது மனைவியை அழைத்து வருவதற்காக புரவிபாளையத்திற்கு வந்துள்ளார். அப்போது முருகேசனுக்கும், தினேஷ்பாபுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ்பாபு கத்தியால் முருகேசனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த முருகேசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீசுார் வழக்குப்பதிந்து தினேஷ்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்