பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

விருத்தாசலம் அருகே பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

Update: 2023-05-11 18:45 GMT

விருத்தாசலம்

விருத்தாசலம் அருகே ஆலடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் நடியப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தனவேல் மகன் தட்சிணாமூர்த்தி(வயது 21) என்பவர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நின்று கொண்டு அப்பகுதி வழியாக வந்து சென்றவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்ததை பார்த்தனர். இதையடுத்து போலீசார் பலமுறை எச்சரித்தும் கேட்காததால் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்