இளம்பெண்ணை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இளம்பெண்ணை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
நாகர்கோவில்,
அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் அட்லஸ் (வயது 26). சம்பவத்தன்று இவர் நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மண்டைக்காடு புதூருக்கு செல்ல பஸ்சுக்காக 22 வயது இளம்பெண் காத்திருந்தார். அந்த பெண்ணை அட்லஸ் கேலி, கிண்டல் செய்துள்ளார். இதனை அவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவரை வாலிபர் ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அட்லஸை கைது செய்தனர்.