மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

வாணியம்பாடியில் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-25 18:57 GMT

வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு மோட்டார் சைக்கிளில் நேற்று காலை ரேஷன் அரிசி கடத்துவதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து அம்பலூர் போலீசார் விரைந்து சென்று அரிசி கடத்திச் சென்ற சிந்தக்காமணிபெண்டாவை சேர்ந்த அண்ணாமலை (வயது 30) என்பவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்து சுமார் 160 கிலோ அரிசியை வாகனத்துடன் பறிமுதல் செய்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்