ஆட்டை வெட்டி சாய்த்த வாலிபர் கைது

ஆட்டை வெட்டி சாய்த்த வாலிபர் கைது

Update: 2023-07-12 18:45 GMT

திங்கள்சந்தை:

திங்கள்சந்தை அருகே உள்ள செட்டியார்மடம் வலியவிளை காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 53), தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டின். இவருடைய மகன் அபீஸ் (20). முருகனுக்கும், அபீசுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் அரிவாளுடன் முருகனின் வீட்டுக்குள் புகுந்த அபீஸ் அங்கிருந்தவர்களை அவதூறாக பேசியதோடு பிரிட்ஜை வெட்டி சேதப்படுத்தினார். இதனை முருகன் தட்டிக்கேட்டார். ஆத்திரத்தில் அபீஸ் அவரை வெட்ட பாய்ந்தார். ஆனால் சுதாரித்துக் கொண்ட முருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் அவர் மீதான கோபத்தில் அங்கு கட்டப்பட்டிருந்த ஆட்டை அபீஸ் வெட்டி சாய்த்தார். இதில் ஆடு துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அபீஸை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்