5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-20 16:10 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனே சிறுமியை வேலூரில் உள்ள டாக்டரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். அப்போது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது அதேப்பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார்செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்