வீட்டை தீ வைத்து எரித்த வாலிபர் கைது

விக்கிரவாண்டி அருகே வீட்டை தீ வைத்து எரித்த வாலிபர் கைது குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் ஆத்திரம்

Update: 2023-03-09 18:45 GMT

விக்கிரவாண்டி

விழுப்புரத்தை அடுத்த தளவானூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 28). இவருக்கும் விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி கிராமத்தை சேர்ந்த சீதாலட்சுமி(27) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. பிரியாஎன்ற மகளும், தமிழரசன் என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சீதாலட்சுமி சித்தணியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் சித்தணிக்கு சென்று சீதாலட்சுமியை குடும்பம் நடத்த அழைத்தபோது அவர் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நேற்று மாலை யாரும் இல்லாத நேரத்தில் சீதாலட்சுமியின் வீட்டை தீ வைத்து கொளுத்தினார். இதில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 5 பவுன் நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலானது.

இது பற்றி சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காத்த முத்து வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்